மேக்கப் இல்லனாலும் டிடி-யோட அழகே தனிதான்… புகைப்படத்தினை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

80

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் பிரபல ரிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்தவித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி. சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது மேககப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் ஆரம்பித்து வைத்த இந்த ட்ரெண்டை கடந்த சில நாட்களாகவே நடிகைகள் பலரும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது டிடி தன்னுடைய மேக் அப் இல்லா புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் எப்போதும் அழகு தான். மேக் அப் இல்லாமல் இன்னும் அழகாக இருக்கீர்கள் என வர்ணித்து வருகின்றனர்.