ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள்

335

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைகேல் கார்சலை காதலித்து வருகிறார். அந்தக் காதலுக்கு அவரது தந்தையும் சம்மதம் தெரிவித்துவிட்டார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

சில மாதங்கள் முன்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்த மைகேல் மிக சகஜமாக ஸ்ருதி உறவினர்களுடன் கலந்து பேசினார். அந்தப் புகைப்படங்கள் வைரலாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைகேல் தனது காதலியான ஸ்ருதிஹாசனுடன் தங்கி இருந்தார்.இதனை தொடர்ந்து மீண்டும் லண்டனுக்கு பறந்து சென்று விட்டார். இப்போது, படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். ஹிந்தி மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் கைவசம் வைத்துள்ள ஸ்ருதி சில தினங்களுக்கு முன்பு நடந்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.