ரஜினி காட்டும் சின்னம் சாத்தானுடையது: பரபரப்பை கிளப்பும் சீமான்

471

நடிகர் ரஜினிகாந்த் தனது கையில் காட்டும் பாபா சின்னம், சாத்தான்களின் முத்திரை என நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் வரும் பாபா முத்திரையை, ரசிகர்களின் முன்பாக காட்டியுள்ளார். மேலும், இணையதளத்திலும் அதனைப் பயன்படுத்தியுள்ளார்.

இதனை அஸ்த முத்திரை, அபான முத்திரை என்றும் யோக நிபுணர்கள் கூறுகின்றனர். ரஜினியின் ரசிகர்கள், இந்த முத்திரையை தீய சக்தியை விரட்டும் சக்தி முத்திரை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘ரஜினி காட்டும் முத்திரை சாத்தானுடையது. அது Symbol of Evil ஆகும். இந்த முத்திரைக்கும் பாபாவிற்கும் என்ன தொடர்பு?’ என தெரிவித்துள்ளார்.