வடிவேலுவின் ஆனந்தக்கண்ணீர் | Vadivelu’s Extreme Happiness Tears

230

வடிவேலுவின் ஆனந்தக்கண்ணீர் | Vadivelu’s Extreme Happiness Tears – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் – யாரை பாதிக்கும் பரிகாரம் என்ன?

நல்ல நிலையில் நடமாட்டத்துடன் இருந்த ஒருவர் திடீரென படுத்த படுக்கையாகி விடுவார். பிசினஸ் ஒஹோ என்று ஓடிக்கொண்டிருக்கும் திடீரென தொடர் நஷ்டம் வரும். கணவன் மனைவி காதலோடு இருப்பார்கள்.

Shocking Secrets Of Black Magic Pumpkin Light And Remedies

திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை போய் கோர்ட் படியேறுவார்கள். இதெல்லாம் சரியில்லாத நேரத்தினால் நடப்பதுதான் என்றாலும் பிறரின் செய்வினை கோளாறுகளும் கூட எளிதாக பாதித்து நஷ்டத்தையும் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது.

பில்லி, சூனியம்
பில்லி, சூனியம்
பில்லி, சூனியம், செய்வினை எல்லாம் பொய் என்று சிலர் சொல்வார்கள். முருகனுக்காக பாடப்படும் கந்தர் சஷ்டி கவசத்தில் பில்லி சூனியம் பெரும்பகை அகல என்ற வரிகள் வருகின்றன. இதனைப் பார்க்கும் போது செய்வினை செய்வதெல்லாம் உண்மைதான் போல என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒருவருக்கு நல்ல நேரமும் தசாபுத்திகளும் நடந்தால் எந்த செய்வினையும், சூனியமும் பாதிக்காது. அதே நேரம் சரியில்லாமல் கெட்டது செய்யக்கூடிய தசாபுத்தி நடத்தால் கண் திருஷ்டி கோளாறுகளும், செய்வினை பாதிப்புகளும் படுத்தி எடுக்கும். அதுபோன்ற நேரங்களில் இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை.

செய்வினை யாரை பாதிக்கும்செய்வினை யாரை பாதிக்கும்
ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லாமல் பிறந்தவர்கள், தற்போது சந்திரனின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள் வாரத்தில் ஒருமுறையோ அல்லது மாதத்தில் ஒரு முறையாவது திங்கட்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வணங்கி வர செய்வினை ஏதேனும் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவை நீங்கும்.

ஜாதகத்தில் நிலை

ஜாதகத்தில் நிலை
ஒருவரின் ஜாதகத்தில் அவரின் வாழ்வை செழிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், 1, 5, 9 ம் அதிபதிகள் ஆவர். லக்னாதிபதி மனோ பலத்தை கொடுக்கக் கூடியவர், வெற்றியை தரக்கூடியவர். பூர்வ புண்ணிய ஸ்தானதிபதி எனப்படும் ஐந்தாம் அதிபதி வைராக்கிய பலத்தை தரக்கூடியவர், பூர்வ புண்ணிய பலத்தாலும், குல தெய்வ அருளாலும், அறிவாலும் எதையும் சாதிக்கும் திறனுடையவர். ஒன்பதாம் அதிபதி பாக்ய ஸ்தானாதிபதி.

பாக்ய சாலி என்று கூறுவார்களே நமது முயற்சிகள் வெற்றி பெற்றால் அது நாம் செய்த பாக்கியம் எனக் குறிப்பிடுகிறோம். அந்த பாக்கியத்தை கொடுப்பவர். ஒன்பதாம் அதிபதி பலம் பெற்றவர்களின் வாழக்கை பாதையை எளிதில் கடந்து விடுவர். இம்மூவரும் ஜாதகத்தில் பலமற்று இருப்பவருக்கே செய்வினை, ஏவல்,பில்லி,சூனியம் இவற்றால் பாதிப்பு ஏற்படும்.

பில்லி சூனிய பாதிப்புபில்லி சூனிய பாதிப்பு
ஆத்மகாரகன் சூரியன் ,மனோகாரகன் சந்திரன், ராகு கேதுவால் கிரகண தோஷம் அடைந்த ஜாதகருக்கும் பாதிப்பு ஏற்படும். ஒன்று, ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் பலம் குன்றியிருப்பினும் ஆத்மா பலம் தரும் சூரியன் நல்லவனாகி ஆட்சி உச்சம் மற்றும் ஸ்தான பலம் பெறும் ஜாதகரை செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கிரகங்களினால் பாதிப்புகிரகங்களினால் பாதிப்பு
லக்னாதிபதி பலமற்று இருப்பதும், லக்னாதிபதியும் , ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை பெறும் போதும் ஜாதகர் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார். ஆறாம் அதிபதி குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டை தொடர்பு பெறும் போதும், இரண்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பதும் ஜாதகரின் குடும்பம் செய்வினை , ஏவல், பில்லி, சூனியம், பேய் பிடித்தல் போன்றவற்றால் பாதிக்கப்படும். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதியின் தசா புத்தி காலங்களில் பாதிப்பு ஏற்படும். ராகு திசை ராகு புத்தி, சனி புத்தி, கேதுபுத்தி காலங்களில் ஏற்படும்.

ராகு கேது சனிராகு கேது சனி
நிழல் கிரகங்களான ராகு கேது 2,8ல் இருப்பவரும் அவரது குடும்பமும் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் போன்ற வற்றால் பாதிபபு ஏற்படும் நிலை ஆகும். கேது திசை கேது புத்தி, சனி புத்தி, செவ்வாய் புத்தி, ராகு புத்தி காலங்களில் ஏற்படும். சனி திசை சனி புத்தி, சனி தசை செவ்வாய் புத்தி, சனி தசை ராகு புத்தி காலங்களில் ஏற்படும். செவ்வாய் சனி கூடவே ராகு அல்லது செவ்வாய், சனி, கேது தொடர்பு பார்வை பெற்று எட்டாம் பாவத்துடன் தொடர்பு பெறுவது செய்வினை பில்லி சூனியத்தினால் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செய்வார்.

செய்வினை என்றால் என்ன?செய்வினை என்றால் என்ன?
ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் செய்து முடக்குவதே சூனியம். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் ஸ்ரீ சங்கரர்திருச்செந்தூரில் ஸ்ரீ சங்கரர்
செய்வினை கோளாறினாள் ஸ்ரீ சங்கரர் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அவரிடம் வாதத்தில் தோற்றுப்போன அபிநவ குப்தன் செய்த செய்வினையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ சங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். ஞான சம்பந்தரும் கூட செய்வினை கோளாறு நீங்க இறைவனை சரணடைந்தவர்தான்.

பரிகாரம் என்ன?பரிகாரம் என்ன?
செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது. குல தெய்வ வழிபாடு அவசியம். சரபேஸ்வரர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

பிரத்யங்கிரா தேவி - பூசணிக்காய் விளக்குபிரத்யங்கிரா தேவி – பூசணிக்காய் விளக்கு
பிரத்யங்கிரா தேவி கோவிலில் செவ்வாய் அல்லது வியாழனன்று, பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, திரி போட்டு விளக்கேற்றினால் உங்களுக்கு செய்யப்பட்ட செய்வினை மாந்திரீக கட்டு உடையும். ஒரு எலுமிச்சை பழத்தை கைகளுக்குள் வைத்து, உங்களின் தீவினைகள் நீங்க உங்கள் குலதெய்வத்தை வேண்டி, அந்த எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த நீர் நிலையில் விட்டெறிந்து, அந்த குளம் அல்லது கடலில் மூழ்கிய பின்னர் குல தெய்வத்தை நினைத்து வணங்க செய்வினை கோளாறுகள் நீங்கும்.

 நல்லது நினைப்போம்நல்லது நினைப்போம்
ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு. (Every Action has an Equal and Opposite Reaction) என்பது நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். நாம் ஒருவருக்கு தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். நாம் நல்லது நினைத்தால் நமக்கு கெடுதல் நினைப்பவர்கள் கெட்டுப்போவார்கள். 21 நாட்கள் சிவ ஆலய தரிசனம் நன்மை செய்யும். செய்வினை கோளாறுகளை போக்கும். எலுமிச்சம் பழத்தை வெட்டி குங்குமம் மஞ்சள் தடவி நிலைப்படியில் வைக்கலாம். வீட்டில் கோமியம் தெளிக்க தீய சக்திகள் வெளியேறும்.