பாகற்காயில் இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே பாகற்காயை வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:

பாகற்காயை ஜூஸாக செய்து அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குடிந்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சாப்பாட்டில் அடிக்கடி பாகற்காயை சேர்த்து கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையடைய செய்யும். நோய் கிருமிகளிடமிருந்து நமது உடலை பாதுகாக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதே போன்ற ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க தொடர்ந்து அல்லது ஒரு சில நாட்களில் பாகற்காயை உணவில் சேர்த்து வந்தாலே நல்ல பலனை காணலாம்.

வயிற்றில் புழு உள்ளவர்கள் பாகற்காயை பொறியலை சாப்பிட்டு வந்தால், புழுக்களை அழித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடலுக்கு நன்மை அளிக்கும்.