வாழ்க்கைக்கு தேவையான மருத்துவகுறிப்புக்கள் இதோ!

414

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

கசகசாவை துளாக்கி பசும் பால் கலந்து இரவு வேலையில் சாப்பிட்ட பின் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேலையில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

காலையிலும், இரவிலும் காய்ச்சிய ஒரு டம்பளர் பசும்பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை குணமாகும்.

தும்பைப் பூவை தினமும் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டைபுண், தொண்டைவலி குணமாகும்.

முருங்கை இலைச்சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை,மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

அவரை இலையை உலர்த்தி இடித்து தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.

தினமும் இரண்டு கேரட் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்போடு முகம் பொலிவு பெறும். தோல் சொரசொரப்பு மாறும்.

ஆளிவிதையை தினமும் அரைத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உணவு செரிக்காமை குணமாகும்.

அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.

நெல்லிக்காயை சாறெடுத்து நல்லெண்ணையை சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளிக்க முடி உதிர்வு குறையும்.

புதினா கீரை, இஞ்சி, எலுமிச்சை சாறு தினசரி உணவில் சேர்த்து வந்தால் இளநரை மாறி முடி கருப்பாகும்