வெளிநாட்டில் இருந்து வந்த நபரின் விபரீத ஆசை: இறுதியில் அறை எண் 102 இல் நடந்த சோக சம்பவம்

1454

பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து நகை கொண்டு வந்த நபர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

எந்திரத்தில் இவரது கைவிரல் சிக்கிய காயமடைந்ததையடுத்து சிகிச்சைக்கு பின்னர் தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளார்.

சிங்கப்பூரியில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்துள்ளார். இவர் மலேசியா விமான நிலையத்தில் நின்றுகொண்டிருக்கையில் சாதிக் என்பவர் சிவக்குமாரை அணுகி, 150 கிராம் தங்க நகையை கொடுத்து இதனை சென்னை விமான நிலையத்தில் பைசல் என்பவரிடம் கொடுத்தால் உனக்கு பணம் தருவேன் என கூறியுள்ளார்.

பணத்திற்காக சிவக்குமாரும் அந்த நகையை வாங்கிகொண்டார். ஆனால் கூறியபடி, பைசலிடம் நகையை சிவக்குமார் கொடுக்கவில்லை. கேட்டதற்கு மலேசியாவில் நடைபெற்ற சோதனையின்போது சுங்க அதிகாரிகள் அதனை வாங்கிகொண்டதாக தெரிவித்துள்ளார்.

சாதிக்கின் கூட்டாளிகள் அஜ்மல், தங்கராஜ் மற்றும் பைசல் ஆகிய மூவரும் சிவக்குமாரை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று நகை எங்கு இருக்கிறது என மிரட்டியுள்ளனர்.

மினா எனும் விடுதியில் அறை எண் 102-ல் சிவக்குமாரை தங்க வைத்து, தொடர்ந்து விசாரித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சிவக்குமார் அந்த அறையிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிவக்குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அஜ்மல் மற்றும் தங்கராஜ், அகமது பைசல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.