வேட்டி அணிவது அவமானமென்றால், நீங்கள் உடுத்தும் பேன்ட் எங்களுக்கு அருவருப்பு.. தமிழ் மண்ணை பழிக்கும் தமிழர்களுக்கு அந்நியரின் நெத்தியடி பதில்..?

249

பட முடிவு

தமிழகத்தின் கலாச்சாரம் தொன்று தொட்டு உலகெங்கிலும் பரவி இருக்கிறது. இன்னும் பல நாடுகளில் கூட தமிழ் தெரியா விட்டாலும், தமிழக பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும் முறையும் உள்ளது.

ரீ-யூனியன், பிகு, பினாங்கு போன்ற இன்னும் நாம் அறியாத பல தமிழ் கலாச்சாரம் கொண்ட நாடுகள் உள்ளன.

தாய்நாட்டில் தமிழ் சிறப்பிடம் பெற்றால் மட்டும் போதாது, தமிழ்நாட்டிலும் தமிழின் மேன்மை உச்சம் தொட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி, இந்திய பண்பாடு, கலாசாரங்களை அறிந்து கொள்கின்றனர்.
தொடர்புடைய படம்
அந்த வகையில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 32 பேர் சென்னை வந்தனர்.

அங்கிருந்து தங்கள் பயணத்தை தொடங்கி பயணத்தை தொடங்கி புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அலங்கார ஆடைகள் அணிந்தும் வலம் வந்தனர். தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு சென்றனர். அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வேட்டி அணிவது  க்கான பட முடிவு
அப்போது 15 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தினர்.

ஆண்கள் வேட்டி, துண்டும், பெண்கள் சேலைகளையும் அணிந்தனர். அந்த பகுதியில் கரும்பு, வாழையால் தோரணங்கள் அமைத்து இருந்தனர். மேலும் மஞ்சள் குலை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கலிட்டு வழிப்பட்டனர்.

தமிழர்களே தமிழர் திருநாளின் பொழுது வேட்டி உடுத்த தயங்கும் நிலையில், பேன்ட் அணிவதை விட வேட்டி அணிவது தான் கம்பீரம் என்கின்றனர்.

தொடர்புடைய படம்