1000 சிறுவர்களின் ஆபாச படத்தை வைத்திருந்த வெளிநாடு வாழ் இந்தியர்: என்ன தண்டனை தெரியுமா?

282

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவர் 1000 சிறுவர்களின் ஆபாசப் போட்டோக்களை வைத்திருந்ததற்காக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த அபிஜீத் தாஸ் என்ற 28 வயது இளைஞர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ் பர்க் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.

அபிஜீத் தாஸ் தனது கணினியில் 1000 குழந்தைகள் ஆபாச போட்டோக்கள், 380 சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை வைத்திருந்துள்ளார்.

பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுவர்களின் ஆபாச படங்கள் வைத்திருப்பது குற்றம் என்பதால், அபிஜீத் தாஸ் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் கண்டறியப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் அபிஜீத் தாஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

சிறையிலிருந்து அபிஜீத் விடுதலையான பின்னர் வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரா என்று அவருடைய செயல்பாடுகளை 10 ஆண்டுகளுக்கு கண்காணிக்கவும் உத்தரவிடபட்டுள்ளது.