3 தக்காளி ! 3 பேஷியல் ! 20 நிமிடத்தில் முகம் பளிச்சிட டிப்ஸ் !

2249

பூமியில் முதன்முதலில் தக்காளியை விளைவித்தவர்கள் மெக்சிகோவின் மையப் பகுதியில் வாழ்ந்த அஸ்டெக் (Aztec) இன மக்கள் என்கின்றனர். இன்று உலக அளவில் சுமார் 7500 வகையான தக்காளி வகைகள் இருக்கிறது. இண்டிகோ ரோஸ், சன் ப்ளாக், போன்ற கருநிற மற்றும் நீலநிற தக்காளி வகைகளில் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிரீன் ஜீப்ரா, ரெட் ஜீப்ரா, எல்லோ ஜீப்ரா மற்றும் பல வித நிறங்களில் பிராந்திஒயின் தக்காளி என பல வகையான நாட்டு வகை, மற்றும் அறிய, விந்தையான மரபணு மாற்று தக்காளி வகைகள் பயிர் செய்யப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் உணவிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த தக்காளி தற்போது முக அழகை பராமரிப்பதில் மிகமுக்கிய இடம் பிடித்திருக்கிறது. தோலின் ஆரோக்கியத்திற்கு தக்காளி சிறந்த உணவாக கருதப்படுகிறது. தக்காளி சாப்பிடுவதால் சூரியனின் புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தோல் மீது தக்காளி பயன்படுத்துவதும் மிகச்சிறந்த பயன்களை தருகிறது. தக்காளிகளில் உள்ள இயற்கையான அமிலங்கள் நம் தோலில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்துகிறது.

மட்டுமல்லாமல் முகப்பருக்களை சமாளிக்கவும், சரும நிறத்தை பாதுகாக்கவும் தக்காளி உதவுகிறது. வீட்டிலேயே தக்காளியை பயன்படுத்தி 3 விதமான ஃபேஷியல் செய்யலாம்! எப்படி என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துகளும் அது தோலுக்கு தரும் நன்மைகளும்:

வைட்டமின் ஏ :

முக புள்ளிகளை மறைக்கும். கடினமான தோலை மிருதுவாக மாற்றும்.

வைட்டமின் பி :

தோல் இளமையாக இருக்க உதவும். சரும் செல்களை பாதிக்கும் காரணிகளுக்கு எதிராக போராடும்.

வைட்டமின் சி :

தோல் விறைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

கால்சியம் :

வறண்ட உலர்ந்த தோலை பாதுகாக்கிறது.

பொட்டாசியம் :

உலர்ந்த சரும செல்களை ஈரப்பதத்தால் பாதுகாக்கிறது.

மெக்னீசியம் :

தோலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.