3 திருமணம் செய்துகொண்ட விஜயகுமார் மகள் வனிதா: 8 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த செயல்… திடுக்கிடும் தகவல்

691

நடிகர் விஜயகுமாரின் வீட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் வனிதா கடந்த 2010-ல் அந்த பாவப்பட்ட வீடு தனக்கு தேவையில்லை என கூறியது தெரியவந்துள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தில் விஜயகுமாருக்கு சொந்தமாக உள்ள பங்களாவை அவரது மகளான வனிதா அபகரிக்க முயல்வதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் வனிதாவை அங்கியிருந்து வெளியேற்றினார்கள்.

தனது தாய் மஞ்சுளாவின் பெயரில் உள்ள அந்த வீட்டை மாற்றாந்தாய் மகன் அருண் விஜய்க்கு எழுதிவைத்து விட்டதாக வனிதா குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

இந்நிலையில் வனிதா குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதியின் மூத்தமகள் வனிதா. இவர் முதலாவதாக டிவி நடிகர் ஆகாஷ், 2 வதாக தொழில் அதிபர் ஆனந்தராஜ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு, மகனை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வனிதா 3-வதாக நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை மணந்தார்.

இதையடுத்து 2010-ல் இந்த வீடு ஒரு பாவப்பட்ட வீடு, அது தனக்கு தேவையில்லை என்று கூறி இருந்த வனிதா, தனக்கும் விஜயகுமார் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில் தான் அந்த வீட்டை அவர் மீண்டும் சொந்தம் கொண்டாட முயல்வதாக புகார் எழுந்துள்ளது.