33 நாட்டைச் சேர்ந்தவர்கள்..157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்! அனைவரும் பலி என அதிர்ச்சி தகவல்

3267

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கிழே விழுந்து நொறுங்கிய நிலையில் அனைவரும் பலியாகியிருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களில் அதாவது 8.44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகியுள்ளது. இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் 33 நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் விமானத்தை தேடும் பணி மும்பரமாக நடைபெற்று வருவதால், விமானத்தை கண்டுபிடித்த பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

மேலும் எத்தியோப்பியா பிரதமரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விமானத்தில் பயணம் செய்த உறவினர்களின் குடும்பத்தினருக்குவருத்தம் தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளதால், அதில் பயணம் செய்த பயணிகள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணம் செய்த உறவினர்களின் உண்மை நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர்.

எத்தியோபியா ஏர்லைஸ்ன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடிஸ் அபாபாவுக்கும் – நைரோபிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.

ஆடிஸ் அபாபா சர்வேத விமான நிலையத்தில் இருந்து காலை 08.38 மணிக்குப் புறப்பட்ட விமானமானது 8.44 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை உயிரோடு இருப்பவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்த விமானம் எத்தியோபிய தலைநகரில் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள Bishoftu என்ற இடத்தில் விழுந்துள்ளது.

அவசர உதவிகளுக்காக விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு எங்களது பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் 149 பயணிகள் 8 விமானப் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த பயணிகள் குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விமான விபத்து தொடர்பான தகவல்களுக்கு 0733666066 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.