66 மில்லியன் வயதுடைய டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு

66

தெற்கு சீனாவில் கிராமப்புறமாக நடந்த சென்ற 4 மாணவர்கள் 66 மில்லியன் வயதுடைய டைனோசர் முட்டைகளை கண்டறிந்துள்ளனர்.

தெற்கு சீனாவை சேர்ந்த 4 கல்லூரி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கிராமத்தில் அடர்த்தியாக தாவரங்கள் நிறைந்த சிறிய பாதையின் வழியே உலாத்தி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது விசித்திரமாக மிகப்பெரிய அளவிலான 6 முட்டைகளை கண்டறிந்தனர். அவை அனைத்தும் டைனோசர் மூட்டைகளாக தான் இருக்க வேண்டும் என அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

உடனே அந்த முட்டைகளை சோதனைக்காக உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு சோதனை மேற்கொண்ட நிபுணர்கள் அவை அனைத்தும் டைனோசர் முட்டைகள் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் அவை 145.5 மில்லியன் ஆண்டுகள் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என கூறியுள்ளனர்.

முட்டை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து எஞ்சிறியிருந்த பொருட்களும் ஒரு வாரத்திற்கு முன்பு அகற்றப்பட்டன. அவை தற்போது ஆராய்ச்சிக்காக பாதுகாப்பான பிங்ஸியாங் அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.